வெட்டப்பட்ட தலை… ஆனாலும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த கோழி: உலகையே ஆச்சரியப்படுத்திய மைக்

0
105

மனிதர்களானாலும் சரி, உயிரினங்களானாலும் சரி உடலில் கை, கால் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் தலை இல்லாமல் வாழ முடியுமா? வாழ முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு கோழி.

1945 காலகட்டத்தில் அமெரிக்காவிலுள்ள கொலராடோவில் வசித்து வந்த ஓல்சென் என்ற விவசாயி, தான் வளர்த்து வந்த மைக் என்ற கோழியை சமைப்பதற்காக அதன் கழுத்துப் பகுதியில் வெட்டியுன்ளார். கழுத்துப் பகுதியில் வெட்டியும் அந்த கோழி சாகாமல் உயிருடன் இருந்துள்ளது. அப்போது அந்தக் கோழி பிறந்து 5 மாதங்கள்.

அதன் கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டும் கோழியின் கழுத்து மற்றும் தொண்டை நரம்பு வெட்டுப்படவில்லை. மேலும் அதன் காது மற்றும் மூளையின் பகுதிகள் காயப்படவில்லை இதனால் கோழி உயிருடன் தப்பியது. அதிசயமாக பார்க்கப்பட்ட இந்தக் கோழிக்கு தினமும் பாலும் தண்ணீரும் கொடுத்து பராமரித்து வந்துள்ளார் ஓல்சன்.

வெட்டப்பட்ட தலையுடன் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்த கோழி தொண்டையில் சோளத் துண்டு சிக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளது. அப்போதைய காலகலட்டத்தில் இந்த கோழி அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.