புனித நதிகளின் தீர்த்தங்களுடன் ஈழத்து திருச்செந்தூர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
94

இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலைய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ம் திகதி புனித கங்கைகளின் தீர்த்தங்கள் கொண்டு இலங்கையில் முதன் முறையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் புனித கங்கைகளின் தீர்த்தம் இலங்கையிலுள்ள புனித கங்கைகளின் தீர்த்தங்கள் கொண்டு இந்தியாவின் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளது என அகில பாரத சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார் பக்த அடியார்கள் அழைப்பு விடுத்துள்ளார்.