700 பேருக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

0
127

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 700 பேருக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளன.

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு 5,400 முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக இந்த 700 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 3,329 மில்லியன் ரூபாய் செலவில் இந்த சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.