டயானா கமகே தலைமறைவு: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு அறிக்கை

0
152

இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தலைமறைவாகியள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) கொழும்பு பிரதான நீதவான் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அறிக்கை

இதனடிப்படையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், டயானா கமகேவை குற்றப் புலனாய்வு திணைக்களம் சந்தேக நபராக பெயரிட்டுள்ளது.

மேலும், கொழும்பு பிரதான நீதவானிடம் குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது இல்லத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.