விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் தலைப்பு வெளியானது!

0
138

நடிகர் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்திற்கு வீர தீர சூரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எஸ்.யு. அருண் குமார் இந்தத் திரைப்படத்தை இயக்குகின்றார்.

இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தின், இரண்டாம் பாகம் முதலில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும் எனவும், முதல் பாகம் பின்னர் படமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீர தீர சூரன் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.