லண்டன் மாப்பிள்ளை… களைக்கட்டிய ஜெயராம் மகள் திருமணம்: குவியும் திரையுலக பிரபலங்கள்

0
98

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயராமின் மகள் மாளவிகாவின் திருமணம் லண்டன் மாப்பிள்ளையுடன் இன்று காலை குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.

ஜெயராம் மற்றும் பார்வதி தம்பதியினரின் மகள் மாளவிகா ஜெயராம் தனது காதலனுடன் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். நவனீத் கிரிஷ் என்பவருடன் மாளவிகா ஜெயராமுக்கு கூர்கில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன் புகைப்படங்களை ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு இன்னொரு மகன் கிடைத்து விட்டார் என பதிவிட்டிருந்தார்.

அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் தனது காதலியுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

அவரது திருமணத்துக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் ஜெயராம் தனது மகள் நிச்சயதார்த்தத்தை நடத்தியிருந்தார். இந்நிலையில் இன்று திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.