சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி: வீட்டை கண்காணித்து வந்த மர்ம நபர்கள்

0
126

தமிழகத்தின் நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அவரது தோட்டத்தில் தனசிங் தீக்காயங்களுடன் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறைப்பாடளித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பம் பதிவாகியுள்ளமை பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுப்பதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 03 தனிப்படைகள் அமைத்து விசாரணை இடம்பெறுவதாக நெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த தனசிங்கின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.