உயிர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறப்போகும் பூமி: எச்சரித்த விஞ்ஞானிகள்

0
102

எதிர்காலத்தில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உயிரினமும் பூமியில் வாழ முடியாத சூழ்நிலை உருவாகி, பூமி மொத்தமாக அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இன்னும் சரியாக 250 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் பூமியில் பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மனிதன் ஏனைய உயிரினங்கள் உட்பட அனைத்தும் மறைந்துவிடும். அந்த சமயத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செலிசியஸை எட்டும்.

அப்போது எந்த உயிரினத்தாலும் பூமியில் வாழ முடியாது. தற்போது நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு நிகழவுள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

250 வருடங்களின் பின்னர் கார்பன் டை ஒக்சைட்டின் அளவு இரண்டு மடங்கு அதிகரித்து, உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துபோகும் சூழல் உருவாகும்.

இந்த நடைமுறையின் பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றாகி, ‘பாங்கேயா அல்டிமா’ என்ற புதிய கண்டத்தை உருவாக்கும்.

பூமியானது முதலில் சூடாகவும், பின் வறண்டதாகவும் இறுதியாக வாழ்வதற்கு தகுதியற்றதாகவும் மாறும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.