வெளிநாடொன்றை நோக்கி படையெடுக்கும் இலங்கை யுவதிகள்!

0
126

2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைகளுக்காக கொரிய நாட்டிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2,064 பேர் வேலைகளுக்காக தென் கொரிய நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்கு 1708 பேர் வெளியேறியுள்ளனர்.

மீன்பிடி தொழிலுக்கு 351 பேர் மட்டுமே சென்றுள்ளனர். கட்டுமானத் துறைக்காக 5 பேர் தென்கொரியாவுக்கும் சென்றுள்ளனர்.

இவர்களில் 1,892 பேர் முதல் தடவையாக தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளார்.

இதேவேளை, 41 யுவதிகளும் கடந்த மாதங்களில் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.