சரிகமபா சீசன் 4 இசைப் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மலையகத்தின் மைந்தன்

0
165

மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சரிகமபா சீசன் 4 இசைப் போட்டி நிகழ்ச்சியின் குரல் தெரிவு சுற்றில் பங்குபற்றி சிறப்பாக பாடல்களை பாடி, நடுவர்களின் பாராட்டுகளை பெற்றதோடு போட்டியாளராகவும் தெரிவாகியுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகரான இவர் பாடும் நிலாவின் பாடல்களை திறமையாக பாடியதை பார்த்தும் கேட்டும் இசை அரங்கமே ஆர்ப்பரித்தது.

இதற்கு முன்னர் மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு சென்று சரிகமபா மேடை மூலம் புகழ்பெற்ற அசானியையடுத்து, தாய்மண்ணுக்கு பெருமை சேர்ப்பதற்காக சரிகமபா மேடையேறியிருக்கும் இந்திரஜித்தின் இந்த இசை முயற்சி பலரால் பேசப்படுகிறது.