உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்  

0
132

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார். 

தொற்று காரணமாக உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 34) ஆவார். 

உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டார்.

இதன்போது வெளியான அறிக்கையில் அந்த நபர் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.