பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தற்கொலைதாரியாக இறக்க விரும்புவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 16 வயது சிறுவனை பிரான்ஸின் பயங்கரவாத எதிர்ப்பு சேவை கைது செய்துள்ளது.
தற்கொலைதாரியாக மாறுவதற்காக வெடிபொருட்கள் அடங்கிய பட்டியை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு தீவிரவாத நோக்கம் இருந்ததா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் – ரஷ்ய மோதல் மற்றும் தீவிரவாத சக்திகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணிகளால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு குறித்து பிரான்ஸ் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரான்ஸ் 45 நாடுகளிடம் உதவி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.