இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்கள் பறிமுதல்

0
100

 சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்கள் பல்வேறு சட்டவிரோத முறைகள் மூலம் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான வாகனங்களை தற்போது பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த வாகனங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறும் அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பு எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.