பலத்த பாதுகாப்புடன் யாழ் வந்த நீதிபதி இளம் செழியன்!

0
135

அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப் பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சம்பவ வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியன் யாழிற்கு வருகை தந்துள்ளார்.

நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை

மேற்படி வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியனுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்று(24.04.2024) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 22.07.2017 அன்று நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இளம் செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.   

அதேவேளை மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததை அடுத்து இன்றுவரை அக்குடும்பத்திற்கு நீதிபதி இளம் செழியன் பாதுகாவலராக  உள்ளார்.