கதிர்காமத்தில் விபத்து: 18 வயது இளைஞர் பலி!

0
196

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கம்உதாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞராவார்.

இன்று (20) அதிகாலை கம்உதாவ ரஜ மாவத்தையிலிருந்து மஹசேன பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த இரு முச்சக்கரவண்டிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டிகளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞரொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.