13 வயது சிறுமி கர்ப்பம் ; குருணாகலில் சம்பவம்!

0
149

13 வயது சிறுமி ஒருவர் உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பில் ஹெட்டிப்பொல பொலிஸார் நேற்று (19) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ள நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவர் இது தொடர்பில் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த சிறுமி மேலதிக பரிசோதனைகளுக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.