மரக்கறிகளின் விலை உயர்வு!

0
117
Fruit and vegetable market. Lots of different fresh fruits and vegetables.

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்பட்டன.

அதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2,800 ரூபாவாகவும் காணப்பட்டது.

மேலும், ஒரு கிலோ தக்காளி 80 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ லீக்ஸ் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ருட் 200 ரூபாவாகவும்,ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ  பீர்க்கங்காய் 100 ரூபாவாகவும்,  ஒரு கிலொ பூசணிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ வாழைக்காய் 150 ரூபாவாகவும் காணப்பட்டது.