Coca-Cola நிறுவனத்தின் உயர் பதவியை பொறுப்பேற்ற கௌஷாலி: இலங்கையிலிருந்து பதவி வகிக்கும் முதல் பெண்

0
103

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான புதிய பணிப்பாளராக கௌஷாலி குசுமபாலவை Coca-Cola நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் இலங்கையிலிருந்து இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையை கௌஷாலி பெற்றுள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் போது இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு குழுக்களுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், தொழில்துறை பங்காளர்கள், நுகர்வோர் மற்றும் வெளி பங்குதாரர்களுடன் இணைந்து அவர் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குசுமபால மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அதேபோல் 1961 ஆம் ஆண்டு முதல் Coca-Cola இலங்கையில் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் நேரடியாக 400 க்கும் மேற்பட்ட நபர்களை பணிக்கு நியமிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.