தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்

0
117

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி தொடர்ந்தும் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்குத் தேவையான கையிருப்பு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.