உலக சாதனை படைத்த ஈழத்து இளைஞனின் சட்டை

0
163

வவுனியா நகரசபை மைதானத்தில் 50 அடி என்று ஆரம்பித்து 53 அடி நீளமான  இராட்சத சட்டை சித்திரை கலை விழாவில்  உலக சாதனை படைத்த சட்டை 2024. ஏப்ரல் 04 மற்றும் 05ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்த சட்டையின் உயரம் = 53 அடி, அகலம் = 15 அடி. சுற்றுவட்டம் = 30 அடி ஆகும். இதன் துணி சில்காெட்டன், கட்டிங் = 2 மணித்தியாலம் (தயார்படுத்தலுடன்) தைக்க எடுத்த காலம் 2 நாட்கள் தேவைப்பட்டதாக தயாரித்தவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டையை தைப்பதற்காக தேவைப்பட்ட துணி அளவு 180 மீட்டர் இதன் நிறை 30 kg என அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ் ஊடகங்கள் இராட்சத சட்டையை வெளிப்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்வும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.