தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

0
123

உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்றுஇ புனித வெள்ளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்கள் இன்றுஇ புனித வெள்ளியை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாட உள்ளனர்.

இந்தநிலையில்இ இலங்கையில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறுஇ காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று. நாட்டில் உள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில்இ பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.