‘இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ்’

0
118

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல் காச, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் தான் திரைக்கதை எழுதப்போகிறார் என கூறப்பட்டது.

ஆனால் லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் இப்படத்திற்கான திரைக்கதையை தனுஷ் தான் எழுத போகிறாராம்.

மேலும் இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே திரைப்படத்தில் எடுக்க முடியாத என்பதனால், இரண்டு பாகங்களாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளதாம்.

இந்த நிலையில், ஒரு பாகத்திற்கு ரூ. 50 கோடி என்ற கணக்கில் இரண்டு பாகங்களுக்கு ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் தனுஷ்  என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.