அரசியல் கட்சி அலுவலகத்திற்கு அருகில் இருந்த கைக்குண்டு!

0
204

கடவத்தை எல்தெனிய பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றிற்கு அருகாமையில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது வெளி நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பின்னர், கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வந்து குறித்த கைக்குண்டை செயலிழக்கச் செய்தனர்.

சம்பவத்தில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், கடவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.