பஸ் விபத்து:மூவர் படுகாயம்

0
116

தனியார் பஸ்ஸொன்று மேல் வீதியில் இருந்து கீழ் வீதியில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

மெதமஹநுவர பிரதேசத்தில் இரண்டாம் வளைவு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பஸ்ஸில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்னர். அத்துடன், பஸ்ஸூக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பிபில பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் சேவைப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த பஸ், கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட போது விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 உடதும்பர பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பகம்மன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.