உங்கள் ஐபோன் தண்ணீரில் விழுந்து ஈரமாகினால், எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அதை எப்படி காய வைக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
இன்று ஸ்மார்ட்போன் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. ஒரு நிமிடம் கூட போனில்லாமல் இருக்க முடியாத சூழ்நிலைக்கு வந்துவிட்டோம். இதனால் போனில் சிறு சிராய்ப்பு ஏற்பட்டால் கூட நமக்கு கவலையாகிறது. இன்று பலரும் அதிக விலையுள்ள ஐபோன் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இவர்கள் தங்கள் ஐபோனை கண்ணும் கடுத்துமாக பாதுகாத்து வருவார்கள். எனினும் சில சமயங்களில் எதிர்பாராவிதமாக தண்ணீரில் விழுந்துவிடும் அல்லது மழையில் நனைந்துவிடும் வாய்ப்புள்ளது.
இப்படி உங்கள் ஐபோன் தண்ணீரில் விழுந்து ஈரமாகினால், எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அதை எப்படி காய வைக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
உடனடியாக டிஸ்கனெக்ட் செய்யுங்கள்:
தண்ணீரில் விழுந்த சமயத்தில் உங்கள் ஐபோனில் சார்ஜரில் இருந்தாலோ அல்லது வேறு எந்த சாதனத்தோடு தொடர்பில் இருந்தாலோ உடனடியாக டிஸ்கனெக்ட் செய்யுங்கள். இதன் மூலம் ஷார்ட் சர்க்குயூட் அல்லது மின்சார பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.
அதிகப்படியான தண்ணீரை அப்புறப்படுத்துங்கள்
உங்கள் ஐபோனின் கனெக்டர் கீழே பார்த்து இருக்குமாறு உங்கள் கைகளால் மென்மையாக போனை தட்டுங்கள். இப்படி செய்வதால் மொபைலுக்குள் இருக்கும் தண்ணீர் அல்லது ஈரம் வெளியே வந்துவிடும்.
காற்றோட்டமான பகுதியில் உலர வையுங்கள்
நல்ல காற்றோட்டம் வரக்கூடிய இடத்தில் ஐபோனை காய வைக்கவும். அப்போதுதான் ஐபோனிற்குள் இருக்கும் ஈரப்பதம் உடனடியாக ஆவியாக மாறி வெளியேறும்.
பொறுமை முக்கியம்
ஐபோன் தண்ணீருக்குள் விழுந்ததுமே பதட்டத்தில் உடனே போனை ஆன் செய்யவோ அல்லது சார்ஜ் ஏற்றவோ செய்யாதீர்கள். ஈரம் காய்வதற்காக குறைந்தப்பட்சம் 30 நிமிடங்களாவது காத்திருங்கள்.
மிச்சம் மீதி ஈரம் இருக்கிறதா எனப் பாருங்கள்
தொடர்ந்து ஐபோனிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தால், கனெக்டர் அல்லது கேபிள் பின் மாட்டும் இடங்களில் இன்னும் ஈரம் இருப்பதாக அர்த்தம். தேவைப்பட்டால் ஒரு நாள் முழுவதும் காய வைக்கவும்