‘போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு புதிய சட்டம்’

0
138

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள், தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக குற்றத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப்பத்திரத்தின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் இந்த தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.