280 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி!

0
151

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (22) நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.

இன்றைய போட்டி பங்களாதேஷ் Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணி தலைவர் Dhananjaya de Silva 102 ஓட்டங்களையும், Kamindu Mendis 102 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக Khaled Ahmed, Nahid Rana தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.