இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு: யாழில் பதற்றம்

0
135

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, கடந்த (19)செவ்வாய்க்கிழமை ஆரம்பமானதை தொடர்ந்து இன்றும்(22) தொடர்கிறது.

இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த கடற்றொழிலாளர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துவங்கி தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.