இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலம் யுவராஜ் சிங் இலங்கைக்கு விஜயம்

0
137

இந்திய அணியின் முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவர் கண்டி தலதா மாளிகையில் உள்ள யானைகளை பார்வையிட நேற்று (16) சென்றுள்ளார்.

இதன்போது அங்குள்ள யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் யுவராஜ் சிங்கும் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.