இலங்கை – இந்திய உறவு; ரணில் எடுத்த உறுதிமொழி

0
143

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை துரிதமாக பலப்படுத்தப்பட வேண்டுமென சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியச் சங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஆகிய அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்த வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் ஒப்பந்தம்

அத்துடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதைப் போன்றே இலங்கையில் இருந்து திருப்பதி, அயோத்தி, குருவாயூர் போன்ற இடங்களுக்கு இலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக செல்வதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்து சமுத்திரம் வளர்ச்சி அடையும் போது நாடும் வளர்ச்சி அடையும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளவது குறித்து இன்னும் பிரித்தானியா ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.