நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புதிய சட்டமூலங்கள்

0
200

2022 மற்றும் 202ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

புதிய சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், 2022ஆம் ஆண்டு 29 புதிய சட்டமூலங்களையும், 2023ஆம் ஆண்டு 78 புதிய சட்டமூலங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்தது.

அதன்படி, 107 சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

நீதி அமைச்சின் வரலாற்றில் இக்காலப்பகுதியிலே அதிக எண்ணிக்கையிலான சட்டமூலங்கள் திருத்தப்பட்டுள்ளன என்றார்.