தலைமன்னாரில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

0
130

56 வயதான ஒருவரே உடல் நலக்குறைவால் கடலில் வீழ்ந்துள்ளார்.

ஏனைய மீனவர்களின் உதவியுடன் மீனவர் கரைக்கு கொண்டுவரப்பட்டு, தலைமன்னார் பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலைமன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.