பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் புதிய யோசனை..

0
186

பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபர் பதவியை வகிப்பவர்கள் குறிப்பிட்ட ஒர் கால வரையறை வரையில் மட்டும் அந்தப் பதவியில் நீடிப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தெடர்பிலான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவி

அரசியல் சாசன பேரவையின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுகின்றார்.

தற்போதைய சட்டங்களின் பிரகாரம் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுபவர் ஓய்வு பெறும் வரையில் அல்லது பதவி நீக்கப்படும் வரையில் பதவியில் நீடிக்க முடியும்.

தற்பொழுது பொலிஸ் மா அதிபர் பதவி குறித்த எவ்வித பதவிக் கால நிர்ணயமும் கிடையாது.

நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பதவி வகிக்கக் கூடிய கால எல்லை நிர்ணயிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.