அதிக சம்பளத்திற்கு ஆசை: ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இந்தியர் உயிரிழப்பு

0
214

உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என ஆசை காட்டப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் அவர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இந்தியர் ஒருவர் போரில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்

இவ்வாறு உயிரிழந்தவர் முகமது அப்சான் என்ற ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர் ஆவார். ரஷ்யாவில் வேலைக்காக சென்ற அவர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்து உள்ளார்.

 உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்

அவருடைய உயிரிழப்பை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

எனினும் அவருடைய மரணத்திற்கான காரணம் அல்லது ரஷ்யாவில் என்ன வேலையில் ஈடுபட்டார் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.