லியோ பாணியில் தோனியின் வருகை; மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்

0
190

2024 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஆயத்த பணிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி செவ்வாய்க்கிழமை (06) சென்னைக்கு பயணித்துள்ளார். நடப்பு சாம்பியன்கள் தங்கள் புகழ்பெற்ற தலைவருக்கு சமூக ஊடகங்களில் பரபரப்பான வீடியோ மூலம் வரவேற்பு அளித்தனர்.

தோனியின் வருகையினை தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் மாஸ் காட்சியை அடிப்படையாக கொண்டு, சித்தரித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடிட் செய்து தனது மஞ்சள் படையணி ரசிகர்களுக்கு புத்துயிர் அளித்துள்ளனர்.

அதே பழைய தோனி தானா?

அந்த வீடியோவில் அனிருத் இசையமைத்த மெய்சிலிர்க்க வைக்கும் “படாஸ்மா ஒரசாம ஓடிடு…” என்ற பின்னணி பாடலுடன் எம்.எஸ். தோனி மாசாக ரீ என்ரீ கொடுக்கிறார். குறித்த வீடியோவில் ஒருவர் தோனி படத்தை மொபைலில் படம் பிடித்து எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்.

பின்னர் சிங்கம் போன்ற உடை அணிந்து இருக்கும் நபர் தோனியின் பழைய படம் ஒன்றை எடுத்து அதன் அழுக்கான கண்ணாடியை உடைத்து பார்க்கும் போது அதில் பழைய தோனியின் படம் வெளிப்படுகிறது.

தற்போது தோனி முடி வளர்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் அந்த பழைய புகைப்படத்தில் முடியை வரைந்து இப்போது வந்திருப்பவர் அதே பழைய தோனி தானா? என பார்க்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது.

தோனி ரசிகர்களுக்கு இந்த காட்சி மெய் சிலிர்க்கும் வகையில் இருப்பதால் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

ஆட்டத்தை இப்போதே ஆரம்பித்த சி.எஸ்.கே

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் ஐ.பி.எல். தொடருக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையிலேயே ஆரம்பித்து விட்டது.

சென்னை அணி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை தற்சமயம், சி.எஸ்.கே. ரசிகர்கள் தமது சமூகதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 17 நாட்களே உள்ளது. மார்ச் 22 ஆரம்பமாகவுள்ள தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி, பெங்களூர் அணியுடன் பலப்பரீட்டசை நடத்துகின்றது.

இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த சீசனில் ஐந்தாவது ஐ.பி.எல். பட்டத்திற்கு வழிகாட்டிய பின்னர் தோனி சென்னை அணியுடன் அண்மையில் இணைந்தார்.

லியோ – சென்னை சூப்பர் கிங்ஸ்

லியோ என்பதே சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாளமாக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் சொல் தான். லியோ என்றால் சிங்கம் என்ற அர்த்தம் இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்னமான சிங்கத்தை குறிப்பிடும் வகையில் லியோ என்ற வார்த்தையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக ஊடகப் பக்கங்களில் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக தோனிக்கு லியோ என்ற அடைமொழியும் கொடுத்து அவ்வப்போது பதிவுகளை வெளியிடும்.

2024 ஐபிஎல் தொடரில் தோனி புதிய அத்தியாயம்

2024 IPL தொடரில் புதிய பங்களிப்பை செய்யவிருப்பதாக தோனி சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்துள்ளார். கடந்த 2019 உலகக் கிண்ண அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி.

அதன் பிறகு தோனி விளையாடும் ஒவ்வொரு ஐபிஎல் சீசனின் போதும் ‘இது அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 5ஆவது முறையாக கிண்ணத்தை வென்றது. அப்போது, இது தான் தோனியின் இறுதி ஐ.பி.எல். தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந் நிலையில் ஆரம்பாமகவுள்ள ஐ.எ.எல். சீசனில் தோனி சென்னை அணியின் தலைவராக செயற்படுவாரா? விளையாடுவாரா? என்ற ரசிகர்களின் பல கேள்விகளுக்கு மத்தியில் தோனியின் இந்த அப்டேட் வந்துள்ளது.