ரோட்டில் நின்று பிச்சை எடுங்கோ; போக்குவரத்து பொலிஸாரை கிழித்து தொங்க விட்ட தமிழர்!

0
123

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோரை பிடித்து தவறான வழக்குகள் போடப்படுவதாக பொது மக்கள் கூற சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு பணம் பறிக்கும் பொலிஸாரின் காணொளி பாதிக்கபப்ட்ட நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். குறித்த நபரை வவுனியாவில் பகுதியொன்றில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரை வழிமறைத்து வேகமாக சென்றதாக கூறி வழக்கு பதிவு செய்து பொலிஸார் பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.

3500 ரூபா கொடுக்க மறுத்தால் வழக்கு

குறித்த நபர் மிதமான வேகத்தில் அதாவது 40 மீற்றர் வந்த போதும் பொலிஸார் அவர் மீது வழக்கை பதிவு செய்துள்ளார். மிதமான வேகத்தில் சென்றவரை ஒளிந்திருந்த பொலிஸார் அவரை மறித்து 3500 ரூபா கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்ததால் ஓவர் ஸ்பீட் என கூறி வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை பொலிஸ்காரர்களில் ஒருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞன் என்பதும் மற்றையவர் சிங்களவர் எனவும் கூறப்படுகின்றது.