ஒவ்வொரு ஆண்டும் 50, 000 உடல் அடக்கம்: உலகிலேயே மிகப் பெரிய கல்லறை இதுதான்

0
160

ஈராக்கில் அமைந்துள்ள புனித நகரமான நஜாஃப் தான் உலகிலேயே மிகப்பெரிய கல்லறைக்கு சொந்தமானது. அமைதியின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்தக் கல்லறைதான் டஜன் கணக்கான தீர்க்கதரிசிகள், விஞ்ஞானிகள், அரசக் குடும்பத்தினர்களை அடக்கம் செய்யும் இடமாகும்.

இந்த கல்லறையில் சுமார் ஆறு மில்லியனுக்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்லறைகள் இடுக்கமான கட்டிடங்கள் போல் காட்சியளிக்கின்றன. இதில் உயர் கல்லறைகள், கீழ் கல்லறைகள் எனும் வகைகள் உண்டு.

இந்தக் கல்லறையானது வெறும் உடல்களை புதைப்பதற்கு மட்டுமல்லாது, கலாச்சார பாரம்பரியத்தின் தனித்துவமான உதாரணமாக விளங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் சுமார் 50,000 பேர் இங்கு அடக்கம் செய்யப்படுகின்றனர். அதுமட்டுமின்றி இங்கு ஒரு கல்லறை தோண்ட வேண்டுமென்றால், $100 செலவாகிறது.

கல்லறைக் கற்களுக்கு $170 முதல் $200 வரையில் செலவாகிறது. இந்த கல்லறையானது உலகின் மிகப்பெரிய புதை குழியாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.