ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு கடந்த (28.02.2024) ஆம் திகதி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தாயகக் கனவைச் சுமந்து தனது இருபது வயதில் தாய்நிலம் பெயர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைமீளப் போராடி விடுதலையான பின்னரான இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாய்நிலம் திரும்பப் போராடி அந்த ஏக்கம் தீராமலேயே சாந்தன உயிரிழந்துள்ளார்.
இருபது வயது இளைஞனாக சிறை சென்ற தன்மகன் என்றோ ஓர் நாள் தாய்மடி சேர்வான் என்ற சாந்தனின் தாயாரின் 33 வருடக் காத்திருப்பு பொய்த்துப் போய்விட்டது.
சாந்தனைப்போன்றே ஈழத்தமிழருக்காக தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழர் சீனிவாசன் என்பவரும் சாந்தன் மரணமான 28ம் திகதி 2009ல் ஈழத் தமிழர்களுக்காக சீனிவாசன் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி 02.03.2009ல் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன் இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி பெப்ரவரி 26, 2009 இரவு 10.50 மணியளவில் தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு அருகில் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால், அவர் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மார்ச் 2, 2009 அன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
இவ்விரு தமிழர்களின் மரணம் நிகழ்ந்த அதாவது 2009, 2024ல் தமிழகத்தில் ஆட்சியில் திமுக ஆட்சியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயம் என முகநூல் விமர்சகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஈழத் தமிழருக்காய் தன்னை ஆகுதியாக்கிய சீனிவாசனுக்கு இன்றுடன் 15வது நினைவுதினம் ஆகும். அவருக்கு எமது நினைவஞ்சலிகள்.