சாரதி இன்றி தானாக இயங்கும் கார்; திட்டத்தை கைவிட்டதா ஆப்பிள் நிறுவனம்?

0
133

ஆப்பிள் நிறுவனம் “அட்டானமஸ் வெஹிகிள்” (autonomous vehicle) எனப்படும் சாரதி இன்றி தானாக இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஈடுபட்டு பல பில்லியன் முதலீடு செய்தது. மேலும் இந்த திட்டத்தில் சுமார் 2 ஆயிரம் வல்லுனர்கள் இதில் பணியாற்றி வந்தனர்.

இத்தகைய வாகனங்களில் பிற கார்களில் உள்ளதை போல் “ஸ்டியரிங் வீல்” மற்றும் “பிரேக்”, “கிளட்ச்”, “ஆக்சிலரேட்டர்” போன்ற பெடல்கள் இருக்காது. இதன் இயக்கம் “குரல்” மூலம் இருக்குமாறு உருவாக்கப்பட்டு வந்தது. 

இருப்பினும் இதுவரை இத்திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. தானியங்கி காரை உருவாக்க மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த தானியங்கி கார் உருவாக்க திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை வளர்ச்சி அடைந்து வருவதால் அதில் முதலீடுகளை செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பில் தற்போது வரை அதிகாரபூர்வ கருத்து தெரிவிக்கவில்லை