தொலைபேசி எண்களை வெளியிடும் திட்டத்திற்கு ஆதரவு; ஊடகத்துறை அரசியலைப் போன்றது – மெக்சிகோ ஜனாதிபதி

0
154

ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் ஆதரவு வழங்கியுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறையானது பொதுத்துறை எனவும் அது அரசியலைப் போன்றது எனவும் மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சகலரும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உலக நாடுகளில் ஊடகவிலாளர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த நாடாக மெக்சிகோ காணப்படும் நிலையில் ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசி எண்ணை பகிரங்கப்படுத்துவது மேலும் ஆபத்தானது என விமர்சிக்கப்படுகின்றது.