ரஷ்ய – அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் பெண் ஒருவரை தேசதுரோகச் சந்தேகத்தின் பெயரில் ரஷ்ய மத்தியப் பாதுகாப்புச் சேவை தடுத்துவைத்துள்ளது.
அந்தப் பெண் உக்ரேன் ஆயுதப் படைகளுக்கு நிதி திரட்டுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று ரஷ்ய மத்தியப் பாதுகாப்புச் சேவை கூறியதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அந்த 33 வயதான லாஸ் ஏஞ்சலிஸ் நகரக் குடியிருப்பாளர் உக்ரேனிய அமைப்பு ஒன்றுக்கு நிதி திரட்டியிருந்தார். அதன் மூலம் உக்ரேனிய ராணுவம் பலனடைந்தது” என்று மத்தியப் பாதுகாப்புச் சேவை கூறியுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
