ஆசியாவின் சிறந்த ஆண் கலைஞர் விருதை வென்ற BTS இளம் பிரபலம்!

0
100

கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் 49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் ‘மக்கள் தேர்வு’ விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

இந்த விருது பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை கவுரவிக்க வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆண் கலைஞர்’ விருதை ‘BTS’ இசைக்குழுவை சேர்ந்த ஜங்குக் பெற்றுள்ளார்.

மக்களின் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யப்படும் இந்த விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்றுள்ளார். 

தற்போது ஜங்குக் ராணுவத்தில் சேர்ந்துள்ளதால் விருதை நேரில் பெற வர முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ”கோல்டன்’ தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார்.

இந்த விருது கிடைத்த தகவல் அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஜங்குக்வுக்கு இணைய தளத்தில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.