இரவில் டயனா கமகே வீட்டில் ஜனாதிபதியுடன் ரகசிய சந்திப்பில் சரத் பொன்சேகா..

0
186

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், சரத் பொன்சேகா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் வீட்டுக்கு இரவில் சென்று ஜனாதிபதியை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டயனா கமகேவின் கணவர், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் எனவும் இவ்வாறு இரண்டு கட்சிகளுடன் தொடர்பு பேணுவது இழிவான செயல் என அவர் கூறியுள்ளார்.

இரவில் ஜனாதிபதியை சந்திக்கும் சரத் பொன்சேகா: மரிக்கார் வெளியிட்ட தகவல் | S M Marikkar Sarath Fonseka

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்க வேண்டுமாயின் கட்சியில் இருக்க வேண்டும் அல்லது ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள வேண்டுமென எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.