ஈரானில் 30 வயதான நபரொருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தந்தை உள்ளிட்ட 12 உறவினர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஈரானில் உள்ள கெர்மன் என்ற மத்திய மாகாணத்தில் பர்யாப் கவுன்ட்டியில் உள்ள புறநகரின் கிராமம் ஒன்றில் குடும்ப பிரச்சனை காரணமாக, நடந்த சண்டையின் உச்சக்கட்டமாக இந்த துபாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
உறவினர்கள் மற்றும் தந்தை ஆகியோரை வெறித்தனமாக சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் பாதுகாப்புப்படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து துப்பாக்கியல் சுட்டுக்கொன்றுள்ளனர்.
