பொதுநலவாய முதலீட்டு சபையின் தலைவர் இலங்கை விஜயம்

0
176

பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் லார்ட் மார்லாண்ட் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் லார்ட் மார்லாண்ட் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவையும் லார்ட் மார்லாண்ட் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக்கை அவர் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கையில் உள்ள தனியார் மற்றும் அரச முதலீட்டாளர்களை சந்தித்து லார்ட் மார்லாண்ட் முக்கிய பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.