இலங்கையில் யுத்தம் இல்லை: முப்படையினர் அதிரடி!

0
205

இலங்கையில் யுத்தம் இல்லாத காலப்பகுதியில் அதிகளவான முப்படையினரை சேவையில் ஈடுபடுத்த தேவையில்லை என கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். 

முப்படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

முப்படையினர்

இராணுவத்தின் எண்ணிக்கையை 1 இலட்சத்து 35 ஆயிரம் ஆக குறைப்பதற்கும் கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கையை 35 ஆயிரம் ஆக குறைப்பதற்கும் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் யுத்தம் இல்லை : முப்படையினர் அதிரடி! | Sri Lanka War Triforces Army Navy Airforce Troops

இராணுவம்

இந்த நிலையில் தற்போது சேவையில் உள்ள இராணுவத்தினரை இடைநிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவ சேவைக்கு புதிதாக நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைக்கு இதுவரை அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் யுத்தம் இல்லை : முப்படையினர் அதிரடி! | Sri Lanka War Triforces Army Navy Airforce Troops

இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து புதிய இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

திறைசேரியின் அனுமதிக்கேற்ப புதிதாக சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுமெனவும் ரசிக குமார கூறியுள்ளார்.

கடற்படை

இலங்கையில் யுத்தம் இல்லை : முப்படையினர் அதிரடி! | Sri Lanka War Triforces Army Navy Airforce Troops

இதேவேளை கடற்படையில் இருந்து ஓய்வுபெறுவோரின் எண்ணிக்கையை விட குறைந்தளவானோர் சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் 2030 ஆம் ஆண்டளவில் கடற்படையினரின் எண்ணிக்கை, அரசாங்கம் மற்றும் கடற்படை திட்டமிட்ட அளவில் இருக்குமெனவும் அவர் உறுதியளித்துள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் திட்டத்துக்கமைய முப்படையினரின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் கயான் விக்ரமசூரிய கூறியுள்ளார்.