75,000 ரூபாவை தாண்டிய நீர் கட்டணம்.. அதிர்ச்சியடைந்த பெண்

0
167

தென்னிலங்கையில் வீட்டின் நீர் கட்டணத்தை அறிந்து பெண்ணொருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஹுங்கம பகுதியை சேர்ந்த W.H கருணாவத்தி பெண்ணின் வீட்டின் நீர்க் கட்டணம் பெருந்தொகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாதாரணமாக மாதாந்தம் 1000 ரூபா நீர் கட்டணம் கடந்த மாதம் 75,000 ரூபாவை தாண்டியுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணம்

குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டும் நீரை பயன்படுத்துவதாகவும் அதற்கு 4 யூனிட் மாத்திரமே செலவாகும் என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 11ஆம் திகதி நீர் கட்டண பட்டியல் எழுதுபவர் வீட்டிற்கு வந்து தண்ணீர் கட்டண பட்டியலை கொடுத்தார். தண்ணீர் கட்டணம் 75000 ரூபாய் என்பதை அறிந்ததும் தலை சுற்றிவிட்டது.

நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், நாங்கள் கூலித் தொழிலாளிகளாக வாழ்கிறோம், எங்களுக்கு வாழ்வதற்கு வீடேனும் இல்லை. குடிநீர் கட்டணத்தில் 800 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

ஹுங்கம ஹாதகல நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பராமரிப்பு அலுவலகத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

தென்னிலங்கையில் நீர் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் | Sri Lanka Water Bill Women Shocking

இதுபற்றி பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது, ​​முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த நேரில் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்தார்.