70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம்.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

0
192

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு பழைய கருவிப்பெட்டியை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெட்டியில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று இருப்பதை ரிக் தற்போது கண்டுபிடித்துள்ளார்.

அந்த கடிதம் இர்வின் பிளெம்மிங் என்ற ஒரு இராணுவ அதிகாரியால் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் | 70 Year Old Love Letter Discovered In America

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வந்துள்ள அக்கடிதத்தில் ‘கடந்த கால சண்டைக்காக மன்னிப்பு கேட்கிறேன்.

விரைவில் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு ராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிகிறது.

இதையடுத்து தற்போது இந்த கடிதத்தை உரியவரிடம் சேர்க்க ரிக் ட்ரோஜனோவ்ஸ் முயற்சித்து வருகிறார்.