இலங்கையர்கள் ஒவ்வொருவர் மீதும் 12 இலட்சம் ரூபா கடன்

0
264

இலங்கை பிரஜைகளாகிய ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 28,095 பில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரம் வீழ்ச்சி

இதேவேளை, வரிக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அதன் தலைவர் டானியா அபேசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.