மன்னருக்கு உறுதியான புற்றுநோய்.. தந்தையை காண ஓடோடி வந்த இளவரசர் ஹரி சிரித்த முகத்துடன் அமெரிக்கா திரும்பினார்

0
245

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உறுதியான நிலையில், உடனடியாக லண்டன் திரும்பிய இளவரசர் ஹரி, தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 40 நிமிடங்கள் வரையில்

சுமார் 26 மணி நேர லண்டன் விஜயத்திற்கு பின்னர், அமெரிக்காவில் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஹரி இணைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை லண்டனில் தரையிறங்கிய இளவரசர் ஹரி, மன்னர் சார்லசை சுமார் 40 நிமிடங்கள் வரையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ஹரி தம்மை சந்திக்க வருவதை அறிந்து மன்னர் சார்லஸ் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 1.30 மணியளவில் இளவரசர் ஹரி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் காணப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.

தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Lands Back In La See King Charles 

அதாவது லண்டனில் தரையிறங்கிய 26 மணி நேரங்களுக்கு பின்னர் மீண்டும் அவர் விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லண்டனில் செலவிட்ட நேரங்களில் இளவரசர் ஹரி ஹொட்டலில் தங்கியதாகவும், அரச குடும்பத்து மாளிகைகளை தவிர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Lands Back In La See King Charles

மன்னர் சார்லஸ் மகிழ்ச்சி

முன்னதாக Sandringham புறப்பட தயாராக இருந்த மன்னர் சார்லஸ், தமது மகன் ஹரி சந்திக்க வருவதை அறிந்து, பயணத்தை தாமதப்படுத்தி காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டதாகவும், சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் கிளாரன்ஸ் மாளிகையில் இருந்து ஹரி புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Lands Back In La See King Charles

ஹரியுடனான சந்திப்புக்கு பின்னர் மன்னர் சார்லஸ் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்- ஹரி சந்திப்பு இந்தமுறை நடக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

லண்டனில் இருந்து புறப்படும் போது இளவரசர் ஹரி சிரித்த முகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னருடன் ஹரி என்ன பேசினார் என்ற தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.